பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை

பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி    பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை
X

பிளஸ் 2 பெதுத்தேர்வில் சாதனை படைத்த, பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ணிகா பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவன் ரித்திஷ்குமார் 585 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம் பெற்றுள்ளார். மாணவிகள் நிஷிகா மற்றும் ஹாசினி ஆகியோர் 600க்கு 584 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 18 பேரும், கணிதத்தில் 3 பேரும், உயிரியலில் 2 பேரும், பொருளாதாரத்தில் ஒருவரும், அக்கண்டன்சியில் ஒருவரும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். தோ;வு எழுதிய 194 மாணவர்களில் 590க்கு மேல் ஒருவரும், 580க்கு மேல் 8 பேரும், 570க்கு மேல் 15 பேரும், 550க்கு மேல் 45 பேரும், 500க்கு மேல் 110 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், துணைத்தலைவர் சுசீலா ராஜேந்திரன், துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜு, பள் முதல்வர் ராஜசேகரன், இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story