பன்முக திறமைக்கான பத்ம விருது: தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

பன்முக திறமைக்கான பத்ம விருது: தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம்.

பன்முக திறமைக்கான விருதான பத்மவிருதுக்கு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நடப்பு, 2022ம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறை, சமூக சேவை, அறிவியல், இன்ஜினியரிங், பொது விவகாரம், சிவில் சேவைகள், வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவர்களுக்கு, வரும் 2023 ஜன. 26ல், புதுடில்லியில் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில், ஜனாதிபதியால் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்து விருதுக்கு, பன்முக திறமை புரிந்த நபர்களிடம் இருந்து கருத்துரு, வரும், ஜூலை, 10க்குள் பத்மஅவார்ட்ஸ்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, தகுதியான நபர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை மாவட்ட சமூகநல அலுவலாத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story