நாமக்கல்லில் சிப்பி, பால் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

நாமக்கல்லில் சிப்பி, பால் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்
X

பைல் படம்.

நாமக்கல்லில் சிப்பி காளான் மற்றும் பால் காளான் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் ஷர்மிளா பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சிப்பிக்காளான் மற்றும் பால்காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 28ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

காலை 10 மணி முதில் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் காளான் வகைகள், காளான் குடில் அமைத்தல், வளர்ப்பு சூழ்நிலை, காளான் உற்பத்தி செய்யத் தேவையான இடுபொருட்கள், அறுவடை செய்தல், விற்பனை மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில்நுட்பம் குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்படும்.

இதில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் கிராமப்புற இளைஞர்கள் கலந்துக்கொண்டு பயனடையலாம். விருப்பமுள்ளவர்கள் வரும் 27ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். பயிற்சியில் பங்கேற்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture