கொங்குநாடு பி.எட் கல்லூரியில் போட்டி தேர்வு பயிற்சி மையம் துவக்க விழா

கொங்குநாடு பி.எட் கல்லூரியில் போட்டி தேர்வு பயிற்சி மையம் துவக்க விழா
X

தோளூர்பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியில், போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தை, கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தோளூர்ப்பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் துவக்க விழா நடைபெற்றது.

தோளூர்ப்பட்டி, கொங்குநாடு பி.எட் கல்லூரியில், தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. கல்வி நிறுவன சேர்மன் டாக்டர் பெரியசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். கல்லூரி உதவி பேராசிரியை சுதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் நாகராஜன் முன்னிலை வகித்தார். அரியலூர் பிடிஓ சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், கல்லூரி முன்னாள் மாணவருமான ரவி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பேசினார்கள். முன்னதாக உதவி பேராசிரியை சுதா வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்