நவராத்திரி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அணிவிப்பு

நவராத்திரி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அணிவிப்பு
X
Namakkal Anjaneyar -நவராத்திரி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு புதிய முத்தங்கி அணிவிக்கப்பட்டது.

Namakkal Anjaneyar -நவராத்திரி விழாவை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு புதிய முத்தங்கி சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுவாமிக்கு தினசரி காலையில் வடை மாலை அலங்காரம் நடைபெறும் தொடர்ந்து, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைறும்.

இதனையடுத்து சுவாமிக்கு தங்கக்கவசம், வெள்ளிக்கவசம், மலர் அலங்காரம், முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெற்று தீபாராதணை நடைபெறும். சுவாமிக்கு ஏற்கனவே முத்தங்கி உள்ளது. இந்த நிலையில் கட்டளைதாரர் மூலம் உயரிய முத்துக்களைக் கொண்டு புதிய முத்தங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.நவராத்திரியை முன்னிட்டு, நேற்று மதியம் புதிய முத்தங்கி அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story