என்கவுண்டர் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு கலெக்டர் மற்றும் எம்.பிக்கள் நேரில் ஆறுதல்

என்கவுண்டர் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு கலெக்டர் மற்றும் எம்.பிக்கள் நேரில் ஆறுதல்
X

பட விளக்கம் : ஏடிஎம் கொள்ளையர்கள் தாக்கியதால் காயமடைந்து, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ் அதிகாரிகளை, மாவட்ட கலெக்டர் உமா, எம்பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், பிரகாஷ், எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அருகில் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

என்கவுண்டர் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு கலெக்டர் மற்றும் எம்.பிக்கள் நேரில் ஆறுதல்

ஏடிஎம் கொள்ளையர்கள் தாக்கியதால் காயமடைந்து, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ் அதிகாரிகளை, மாவட்ட கலெக்டர் உமா, எம்பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், பிரகாஷ், எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அருகில் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

என்கவுண்டர் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு கலெக்டர் மற்றும் எம்.பிக்கள் நேரில் ஆறுதல்

நாமக்கல்,

குமாரபாளையம் அருகே, ஏடிஎம் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ் அதிகாரிகளை, மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.பிக்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த, 27ம் தேதி, ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு, கன்டெய்னர் லாரியில் தப்பிய, ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளைக்கும்பலை, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் போலீசாரைத் தாக்கினார்கள். அப்போது, குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. ரஞ்சித் ஆகியோர் காயமடைந்தனர். பின்னர் தற்காப்புக்காக கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். அப்போது, கொள்ளையன் ஜூமாந்தின் (37), என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். குண்டுகாயத்துடன், ஹஸ்ரு (எ) அஜர்அலியை (28), போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த என்கவுண்டர் சம்பவத்தின்போது, கொள்ளையர்கள் தாக்கியதில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. ரஞ்சித்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், கலெக்டர் உமா, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், லோக்சபா எம்.பிக்கள் நாமக்கல் மாதேஸ்வரன், ஈரோடு பிரகாஷ், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை தந்து, காயமடைந்த போலீஸ் அதிகாரிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உடன் கலந்துகொண்டார்.

Next Story
தொழில்நுட்ப புரட்சியின் ஊக்குவிப்புடன், எதிர்காலத்துக்கான பாதுகாப்பை உருவாக்கும் AI!