நாமக்கல் மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி

தொழில் முனைவோருக்காக நடத்தப்படும் சிறப்பு பயிற்சியில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத்தில் உள்ள, தேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் (Entrepreneurship Development and Innovation Institute) இணைந்து, தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது. அகமதாபாத் EDII நிறுவனம் பாடத்திட்டத்தை தீர்மானிக்கும். பாடத்தின் ஒரு பகுதி அவர்களின் பேராசிரியர்களால் நேரடியாக நடத்தப்படும். இதற்கான வகுப்புகள் வரும் அக்டோபர் 14, 2024 அன்று தொடங்கும். இதற்கான நேர்காணல்கள் இம்மாதம் இறுதியில் நடைபெறும். இப்பயிற்சியில், வயது 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் சேர்ந்து பயன்பெறலாம். இந்த பாடநெறி ஒரு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். வேலைவாய்ப்புக்கான படிப்பு அல்ல. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்முனைவோராக மாற முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும். பயிற்சி முழுவதும் சென்னையில் உள்ள இடிஐஐ மையத்தில் உயர் தரத்துடன் கூடிய வகுப்பறையில் நடத்தப்படும்.
விருப்பமுள்ள நபர்கள் மற்றும் தொழில் முனைவோர் விண்ணப்பங்களை இடிஐடிஎன்.இன் என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ. 80,000 என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்ததை 2 தவணைகளாக பிரித்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணத்தை செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் என்பவரை 9952371533, 8668101638 என்ற செல்போன் நம்பர்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu