நுகர்வோர் கோர்ட் உத்தரவுப்படி வாடிக்கையாளருக்கு தனியார் நிறுவனம் இழப்பீடு..!

நுகர்வோர் கோர்ட் உத்தரவுப்படி வாடிக்கையாளருக்கு  தனியார் நிறுவனம் இழப்பீடு..!

கோப்பு படம் 

நுகர்வோர் கோர்ட் உத்தரவுப்படி வாடிக்கையாளருக்கு தனியார் நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கியது.

நாமக்கல் :

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவின்படி, பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.76,280 இழப்பீட்டிற்கான டி.டிஐ வழங்கியது.

நாமக்கல்லைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி உதயப்பிரியா (56). இவர், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் பிரபல தனியார் நிறுவனத்தில், 2019ம் ஆண்டு, அவரது வீட்டிற்கு சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு ரூ. 65,000 செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனம், உதயப்பிரியாவிற்கு கட்டணம் இல்லாமல் ஹாலிடே ரிசார்ட்டில் 3 நாட்கள் குடும்பத்துடன் தங்கிக் கொள்ள வவுச்சர் ஒன்றும் வழங்கியுள்ளது.

உரிய காலத்தில் சிசிடிவி கேமரா பொருத்தித்தராமல் இழுத்தடித்து, 2022ல், கேமராவை பொருத்திக் கொடுத்தனர். ஹாலிடே ரிசார்ட்டில் தங்குவதற்கு வழங்கப்பட்ட வவுச்சரும் காலாவதியானது. அதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர், தனியார் நிறுவனத்தின் மீது, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் இன்று தீர்ப்பளித்தினர்.

அதில், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு இழப்பீடாக, ரூ. 60,000 ரூபாய், வழக்கு செலவு தொகையையும், 4 வாரத்திற்குள் வழங்கவேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை வழங்க தவறியதால், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தின் கிளை மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் இன்று ஆஜரான வீட்டு உபயோக விற்பனை நிறுவன கிளை மேலாளர், கோர்ட் உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையும், செலவு தொகையும், காலதாமதத்திற்கான வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ. 76,280கான பேங்க் டிடியை சமர்ப்பித்தார்.

பேங்க் டிராப்ட்டை, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், வழக்கு தாக்கல் செய்ய உதய பிரியாவிடம் வழங்கினார். நுகர்வோர் கோர்ட் வழங்கும் உத்தரவுகளை நிறைவேற்றத் தவறினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் அதிகாரம் நுகர்வோர் கோர்ட்டுகளுக்கு, கடந்த 2019ல் இயற்றப்பட்ட சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read MoreRead Less
Next Story