புதிய டெண்டர் அறிவிப்பால் 2 ஆயிரம் கேஸ் டேங்கர் லாரிகள் ஓட்ட முடியாமல் பாதிக்கும் அபாயம் : 11ம் தேதி நாமக்கல்லில் பொதுக்குழு கூட்டம்

புதிய டெண்டர் அறிவிப்பால் 2 ஆயிரம் கேஸ் டேங்கர்    லாரிகள் ஓட்ட முடியாமல் பாதிக்கும் அபாயம் :    11ம் தேதி நாமக்கல்லில் பொதுக்குழு கூட்டம்
X

தென்மண்டல எல்பி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மத்திய அரசுக்கு சொந்தமான, ஆயில் கம்பெனிகள் அறிவித்துள்ள டெண்டர் அறிவிப்பில், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் சுமார் 2 ஆயிரம் லாரிகள் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவாதிப்பதற்காக வருகிற 11ம் தேதி, நாமக்கல்லில் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

நாமக்கல்,

மத்திய அரசுக்கு சொந்தமான, ஆயில் கம்பெனிகள் அறிவித்துள்ள டெண்டர் அறிவிப்பில், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் சுமார் 2 ஆயிரம் லாரிகள் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவாதிப்பதற்காக வருகிற 11ம் தேதி, நாமக்கல்லில் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பின்னர் தலைவர் தலைவர் சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் கம்பெனிகள் டேங்கர் லாரிகளுக்கான புதிய டெண்டரை அறிவித்துள்ளது. இது குறித்து, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில், அந்த டெண்டரை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கடந்த முறை அறிவித்த டெண்டரைக் காட்டிலும் தற்போதைய டெண்டரில் அதிக அளவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகளை மாற்ற வேண்டும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். வரும், 11ம் தேதி, நாமக்கல்லில் சங்க பொதுக்குழு கூட்டத்தை கூட்டி புதிய டெண்டரில் உள்ள, சாதக, பாதகம் குறித்து விவாதித்து முடிவு எடுக்க உள்ளோம்.

எங்களின் கோரிக்கைகளை ஆயில் கம்பெனி அதிகாரிகளிடம் தெரிவித்து, டெண்டரை நல்ல முறையில் நடத்த கேட்டுக்கொள்ள உள்ளோம். தற்போது ஆயில் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், 5,514 கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள ஒப்பந்தகாலம் வரும், ஆக. 31ல் முடிகிறது. புதிய ஒப்பந்தத்துக்கு, மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம் என ஆயில் கம்பெனிகள் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், 3,478 எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மீதமுள்ள லாரிகள் வேலை இழப்பு ஏற்படும் என்பதால், டேங்கர் லாரி உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் புதிய டெண்டரில், கடந்த டெண்டரை விட அதிகமான கண்டிசன்கள் உள்ளது. அதில், வாகனத்தில் 2 டிரைவர்கள் இல்லை என்றால், ரூ. 10,000 அபராதம், வண்டி விபத்தில் சிக்கினால், டெண்டரை ரத்து செய்வது, இதுபோன்ற கண்டிசன்களால் டேங்கர் லாரிகளை எங்கேயும் ஓட்ட முடியாது. சிறிய சிறிய விசயங்களுக்கு எல்லாம் அதிகமான நெருக்கடி உள்ளது. அதிக இடங்களில் பார்க்கிங் வசதி இல்லை. மேலும், இந்த புதிய ஒப்பந்தத்தில், டிரிபிள் ஆக்சில் இருக்கும் வாகனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. டபுள் ஆக்சில் லாரி அதிகமாக இருப்பதால், அனைத்து டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமா என பயத்தில் உள்ளனர்.

புதிய டெண்டர் நிபந்தனைகளின்படி ஏராளமான டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்தம் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இவற்றை தவிர்க்க சங்கம் மூலம் ஆயில் கம்பெனி அதிகாரிகளிடம் நிபந்தனைகளை தளர்த்த வலியுறுத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story