புதன்சந்தையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு

புதன்சந்தையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு
X

புதன்சந்தையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பிக்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

புதன்சந்தையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை, அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் செயல்பட்டு வரும் மின்வாரிய துணை மின்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமைவகித்தார். நிகழ்ச்சிக்கு எம்பிக்கள் ராஜேஸ்குமார், சின்ராஜ், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூ.41.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செயற்பொறியாளர் அலுவலகம், உதவி பொறியாளர் அலுவலகம் ஆகியவை அடங்கிய புதிய கட்டிடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் திறந்து வைத்து பேசியதாவது:

தமிழக முதல்வர் விவசாயிகளுக்காக, 1 லட்சம் புதிய விவசாய மின்இணைப்புகளை நடவடிக்கை எடுத்து வருகு'றார். இதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் 838 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய விவசாய மின்இணைப்பு பெற விவசாயிகளின் விண்ணப்பங்கள் தயார்நிலை பெறப்பட்டு புதிய மின் இணைப்பு வழங்கும் பணி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மின்சர வாரியத்தின் சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் நகர பகுதியிலும், ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் எருமப்பட்டி பகுதியிலும், ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் காளப்பநாய்க்கன்பட்டி பகுதியிலும், ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் வளையப்பட்டி பகுதியிலும், மொத்தம் 6 புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி குறைந்த மின்னூட்டம் மற்றும் உயர்மின் அழுந்த குறைபாடுகள் நிலவிவந்த பகுதிகளில் அதனை சீர்செய்து தடையற்ற மின்சாரம் வழங்கிட ரூ.3 கோடி மதிப்பிலான வெவ்வேறு 41 மின்மாற்றிகள் புதிதாக நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக, அமைச்சர் பேசினார். விழாவில், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், செயற்பொறியாளர் சபாநாயகம் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!