நாமக்கல்லில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

நாமக்கல்லில் புதிய பாரத எழுத்தறிவு    திட்ட வழிகாட்டுதல் பயிற்சி முகாம்
X

நாமக்கல்லில் நடைபெற்ற, புதிய பாரத எழுத்தறிவு திட்ட வழிகாட்டுதல் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட, இணை இயக்குனர் பொன்குமாருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வள மையத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வள மையத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுத்தறிவினை சிறப்புற கற்பித்து, நாமக்கல் மாவட்டத்தில் எழுதப் படிக்க தெரியாத எவரும் இல்லை என்ற நிலையை அடைவதற்கான இந்த சிறப்பு பயிற்சி முகாமில் பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி வரவேற்றார். உதவி திட்ட அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் இணை இயக்குனர் டாக்டர் பொன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு என்எல்ஐபி தன்னார்வர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாமினை நடத்தினார். வட்டார கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியம், அருள் புனிதன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா, வட்டார வள மைய பயிற்றுனர்கள் மகேஷ்வரி, கலைச்செல்வி, தினேஷ் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Next Story