நாமக்கல் ஸ்ரீ நரசிம்மர் சுவாமி கோயில் முப்பெரும் தேரோட்டம்

நாமக்கல் அருள்மிகு நரசிம்மர் சுவாமி கோயில் பங்குனி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர். உட்படம்: தேரில் காட்சியளித்த நாமகிரித்தயாருடன் ஸ்ரீ நரசிம்மர்.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லினால் உருவான மலைக்கோட்டை யின் கிழக்குப்புறத்தில் அருள்மிகு அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்காநாதர் கோயில் குடவறைக்கோயிலாக அமைந்துள்ளது. மலையின் மேற்குப்புறத்தில் அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மசுவாமி திருக்கோயில் குடவறைக்கோயிலாக அமையப்பெற்றுள்ளது.
மலைக்கு மேற்குப்பக்கத்தில் நரசிம்மர், நமகிரி தாயாரை வணங்கியபடி 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். புராண சிறப்புப்பெற்ற இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஒவ்வொரு நாளும் இரவில் அன்னம், சிம்மம், அனுமந்தம், கருடன், சேஷன்,யானை மற்றும் குதிரை வானங்களில் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்வாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. காலையில் கோட்டையில் உள்ள ஸ்ரீ நரமசிம்மர் சாமி, நாகிரி தாயார் தேரோட்டத்தில், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ் குமார் மற்றும் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
இதில் டிஆர்ஓ கதிரேஷன், ஆர்டிஓ மஞ்சுளா, நாமக்கல் நகராட்சி கமிஷனர் சுதா, டிஎஸ்பி சுரேஷ், நகராட்சி தலைவர் கலாநிதி, கவுன்சிலர்கள் கலைச்செல்வி, சரவணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனைத்தொடர்ந்து மாலை மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தேரோட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முப்பெரும் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu