நாமக்கல்: ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி துவக்கம்

நாமக்கல்: ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி துவக்கம்
X
நாமக்கல் மாவட்டத்தில் ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி துவங்கியது.

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், பெரும்பாலான போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய, 8 தாலுகாக்களில் உள்ள வழங்கல் அலுவலகத்தில், ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் முகாம் நேற்று துவங்கியுள்ளது.

நாமக்கல் தாலுகா வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமில், முதுநிலை ஆர்.ஐ., பிரகாஷ் தலைமையில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைக் கொண்டுவந்து இணைத்துக் கொண்டனர். இப்பணி தொடர்ந்து தினசரி நடைபெறும். பொதுமக்கள் அனைவரும், ஆதாருடன், தங்களது வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக் கொள்ள வேண்டும் என, வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்