நாமக்கல்: 21-ம் தேதி இயற்கை முறையில் மண்வள மேம்பாட்டு பயிற்சி முகாம்
பைல் படம்.
நாமக்கல்லில் வரும் 21ம் தேதி, இயற்கை முறையில் மண்வள மேம்பாடு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய (கே.வி.கே) தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 21ம் தேதி சமச்சீர் உரமிடல் மற்றும் இயற்கை முறையில் மண்வள மேம்பாடு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் மண் மற்றும் பாசனநீர் பரிசோதனையின் முக்கியத்துவங்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கேற்ற சமச்சீர் உரமிடல், உரமிடும் அளவு, காலம், மண்வளத்தை மேம்படுத்தும் அணுகுமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இத்துடன் மண்வள மேம்பாடு மற்றும் சமச்சீர் உரமிடல் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது, செரிவூட்டப்பட்ட மக்கும் உரம் தயாரித்தல் குறித்த செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படும். இதில் விவசாயிகள் மற்றும் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் 04286-266345, 266650 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu