நாமக்கல் எஸ்.சி பொது பிரிவு, குமாரபாளையம் பொது பிரிவுக்கு ஒதுக்கீடு

நாமக்கல் எஸ்.சி பொது பிரிவு, குமாரபாளையம் பொது பிரிவுக்கு ஒதுக்கீடு
X
நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவி ஒதுக்கீடு குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்5 நகராட்சி மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியலை மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் நகராட்சி – எஸ்.சி (பொது), ராசிபுரம் – பெண்கள் (பொது), திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 3 நகராட்சிகள், பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

19 டவுன் பஞ்சாயத்துக்களில் சேந்தமங்கலம், பரமத்தி வேலூர் ஆகிய, 2 டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவி பெண்கள் (பொது) பிரிவுக்கும், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, காளப்பநாயக்கன்பட்டி, படைவீடு, பட்டணம், அத்தனூர், நாமகிரிப்பேட்டை ஆகிய, 7 டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிகள் எஸ்.சி., (பொது) பிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், எருமப்பட்டி, மோகனூர், பாண்டமங்கலம், பரமத்தி, பொத்தனூர், வெங்கரை, பிள்ளாநல்லூர், வெண்ணந்தூர், ஆலாம்பாளையம், மல்லசமுத்திரம் ஆகிய 10 டவுன் பஞ்சாயத்துக்கள் பொது பிரிவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil