நாமக்கல் நகராட்சி 16வது வார்டு காங்., வேட்பாளர் பலகாரக்கடையில் ஓட்டு வேட்டை

நாமக்கல் நகராட்சி 16வது வார்டு காங்., வேட்பாளர் பலகாரக்கடையில் ஓட்டு வேட்டை
X

நாமக்கல் நகராட்சி 16வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் நவீத், ஒரு டீகடையில் பஜ்ஜி செய்து கொடுத்து ஓட்டு சேகரித்தார்.

நாமக்கல் நகராட்சி 16வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷேக் நவீத், டீக்கடையில் பஜ்ஜி செய்து கொடுத்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

நாமக்கல் நகராட்சி 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷேக் நவீத் போட்டியிடுகிறார். அவர் 30வது வார்டுக்கு உட்பட்ட ரெங்கர் சன்னதி படிவாசல் தெரு, பெரியண்ணன் தெரு, கொல்லம் பட்டறை தெரு, பகவதி அம்மன் தெரு உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கை சின்னத்திற்கு வாக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அப்போது ஒரு டீ கடையில் பலகாரம் செய்து கொடுத்து அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். பல இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

ஓபிசி மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜாகிர்பாஷா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோவிந்த் ஆர்ட்ஸ் பாபு, முத்துகுமார், சோடா ராஜேந்திரன், அப்துல்லா, பாபு, கேசன் உள்ளிட்ட பலர் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india