நாமக்கல்லில் வரும் 16ம் தேதி திமுக லோக்சபா தேர்தல் பரப்புரை கூட்டம்

Namakkal Lokshaba Election Meeting நாமக்கல் லோக்சபா தொகுதிக்கான திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வரும் 16ம் தேதி, நாமக்கல்லில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 16ம் தேதி திமுக  லோக்சபா தேர்தல் பரப்புரை கூட்டம்
X

 நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி.,

Namakkal Lokshaba Election Meeting

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், கடந்த 10 ஆண்டுகளில், மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்த அதிமுகவின் துரோகங்களையும், மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பரப்புரை நடைபெறுகிறது. வருகிற 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நாமக்கல் பார்க் ரோட்டில், நாமக்கல் லோக்சபா தொகுதிக்கான பரப்புரை கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி. தலைமை வகிக்கிறார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி மற்றும் நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி திமுக செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், முனிசிபாலிட்டி கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 12 Feb 2024 7:30 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து பூஜை துவக்கம்
 2. தமிழ்நாடு
  நாளை முதல் தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்
 3. வீடியோ
  திமுக ஆட்சி எப்படி இருக்கு ? Certificate கொடுத்த TTV !#TTV #ttv...
 4. வீடியோ
  ANNAMALAI வெளியிட்ட தீடீர் வீடியோ | | காரில் சென்றுக்கொண்டே வேண்டுகோள்...
 5. அரசியல்
  தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் மட்டுமே?: கமல் தீவிர ஆலோசனை
 6. தமிழ்நாடு
  சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைப்பது குறித்து தலைமைச் செயலாளர்...
 7. வீடியோ
  எ.பழனிசாமி ஆட்சியா நடந்துச்சு ? கல்லாப்பெட்டி கம்பெனி நடந்துச்சு !#ttv...
 8. இந்தியா
  செல்போன் இருந்தா..நீங்களும் தேசிய படைப்பாளி விருது வாங்கலாம்..!
 9. லைஃப்ஸ்டைல்
  Funny Food Quotes In Tamil உணவுக்கு முன் பசியுடன் இருப்பதை விட ...
 10. வீடியோ
  EPS-ஐ ஓட ஓட விரட்ட வேண்டும் | தொண்டர்களுக்கு உத்தரவுபோட்ட OPS |...