நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள்

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள்
X

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் நடைபெற்ற பாரதியார் 100வது நினைவு நாள் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்லத்தில் பாரதியாரின் 100வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்லத்தில் நூலக வாசகர் வட்டம், நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை சார்பில், மகாகவி பாரதியாரின் நூறாவது நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நூலக வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் மோகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். துணைத்தலைவர் அமல்ராஜ், பசுமை இயக்கம் சிவப்பிரகாசம், சிவராமச்சந்திரன், திருக்குறள் ராசா, நம்மாழ்வார் பள்ளி தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன், உழவர் ஆனந்த், கணேசன், ரவி, கமலநாதன், ராஜ்குமார், ஜோதிமணி உள்ளிட்டோர் பாரதியார் பாடல்கள் பாடி அவரது உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story
ai solutions for small business