நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு தியாகி காளியண்ணன் பெயரை சூட்ட கோரிக்கை

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு தியாகி காளியண்ணன் பெயர் சூட்டக்கோரி, கொங்கு அமைப்புகளின் சார்பில் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அருகில் கரூர் எம்.பி. ஜோதிமணி, கொங்குவேளாளர் கவுண்டர் பேரவை தலைவர் தேவராஜன் ஆகியோர்.
நாமக்கல கட்டபட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு தியாகி காளியண்ணன் பெயரை சூட்ட வேண்டும் என்று கொங்கு ளேவாளர் அமைப்புகளின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் கொங்குநாட்டு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம், கரூர் பார்லி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, கொங்குவேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜன், கொமதேக மாநில செயலாளர்
கார்த்திகேய சிவசேனாபதி, தமிழ்நாடு காங்கிரஸ் (ஓபிசி) மாநில துணைத் தலைவர் டாக்டர் செந்தில், நாமக்கல் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளர் பழனிசாமி ஆகியோர், சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி காளியண்ண கவுண்டர். இவர் டாக்டர் அம்பேத்கர் தலைமயிலான இந்திய அரசியல் நிர்னய சனபயின் உறுப்பினராக இருந்தவர்.
முதல் இந்திய பார்லிமென்ட்டின் எம்.பியாக பணியாற்றியவர். 3 முறை எம்எல்ஏ, எம்எல்சி, சேலம் ஜில்லா போர்டு தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காக பணியாற்றியவர்.
மகாத்மா காந்தி, நேரு, காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். 200க்கும் மேற்பட்ட பள்ளிகள், பல்வேறு அரசு நிறுவனங்கள் அமைய காரனமாக இருந்தவர். அவர் தனது 101வது வயதில் கடந்த 28.05.2021 ல் காலமாணார்.
தேசத்திற்கான அவரது தன்னலமற்ற தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில், நாமக்கல்லில் புதிதாக கட்டபட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு தியாகி காளியண்ணன் பெயரை சூட்ட வேண்டும் இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu