முறையான சம்பளம்: நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்

முறையான சம்பளம்: நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்
X

கோப்பு படம்

முறையான சம்பளம் வழங்கக்கோரி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல், மோகனூர் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 115 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 50 பேர் தூய்மைப் பணியிலும், மீதமுள்ளவர்கள் பாதுகாப்பு பணியாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே, அரசு நிர்ணயித்த சம்பளத்தை சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனம் வழங்கவில்லை. கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கூடுதல் நேரம் வேலை செய்தற்கான ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை என சம்மந்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் புகார் எழுப்பினர். இதுதொடர்பாக கடந்த மாதம் 27ம் தேதி ஆஸ்பத்திரி வளாகத்தில் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்மந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் சம்பள உயர்வு வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மீண்டும் சம்மந்தப்பட்ட தூய்மைப்பணியாளர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் காலவரைற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனவும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil