நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஒரே நாளில் 18 பேர் வேட்புமனு தாக்கல்

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஒரே நாளில் 18 பேர் வேட்புமனு தாக்கல்
X
நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஒரே நாளில் 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 14 பேரும், டவுன் பஞ்சாயத்து பதவிக்கு 4 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். கூட்டணி பங்கீடு முடியும் முன்பே குமாரபாளையம் நகராட்சியில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் உள்ள மொத்தம் 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்க வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. 28ம் தேதி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 29ம் தேதி ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ராஜூ என்பவர் மனு தாக்கல் செய்தார். 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

நகராட்சி:

இன்று 31ம் தேதி நாமக்கல் நகராட்சி 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு செல்வராஜ் (39) சுயேச்சை வேட்பு மனு தாக்கல் செய்தார். குமாரபளையம் நகராட்சி 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஸ்கரன் (33) சுயேச்சை, 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயகுமார் (45) சுயேச்சை, 12 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சண்முகம் (43) சிபிஐ(எம்), 15வது வார்டு உறுப்பிரன் பதவிக்கு மாணிக்கம் (74) சுயேச்சை, 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு லட்சுமணன் (49) சுயேச்சை, 17வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சித்ரா (41) சுயேச்சை, 19வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரம்யா (25) திமுக, 19 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு உஷாராணி (29) சுயேச்சை, 22வது வார்டு உறுப்பினர் பதவிக்கு யுவராஜ் (29) சுயேச்சை, 23வது வார்டு உறுப்பினர் பதவிக்கு உஷா (39) சுயேச்சை, 29வது வார்டு உறுப்பினர் பதவிக்கு யோகராஜ் (23) சுயேச்சை, 31வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கோபாலகிருஷ்ணன் (39) சுயேச்சை, 33 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கார்த்திக் (27) சுயேச்சை ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

டவுன் பஞ்சாயத்து:

எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து வார்டு 2 உறுப்பினர் பதவிக்கு அப்பாஸ் (20) என்பவரும், வார்டு எண்10 உறுப்பினர் பதவிக்கு ஜெயகுமார் (40) என்பவரும், பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்து 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பிரியா (40) என்பவரும், பொத்தனூர் டவுன் பஞ்சாயத்து 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பிரியா (40) என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று ஒரு நாளில் குமாரபாளையம் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 பேரும், நாமக்கல் நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து வார்டுக்கு 2 பேரும், பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்துக்கு ஒருவரும், பொத்தனூர் டவுன் பஞ்சாயத்துக்கு ஒருவரும் என மொத்தம் 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் வார்டு பங்கீடு குறித்து இன்னும் முறையான அறிவிப்பு வராத நிலையில் குமாரபாளையம் நகராட்சிக்க திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare