பள்ளி, கல்லூரிகள் திறப்பு, நாமக்கல்லில் தனியார் பள்ளிகளுடன் ஆலோசனை
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் முதன்மை கல்வி அலுவலர் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா பரவுதல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை. இந்நிலையில், தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை விதிமுறைகளுடன் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
வருகிற செப்., 1 முதல் 9, 10, பிளஸ் 1, பிள்ஸ் 2 வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது.
இதையொட்டி, தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள், சுயநிதிப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
மாவட்ட சிஇஓ பாலசுப்ரமணியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது;
வரும், செப். 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சிக்கை நடவடிக்கையாக, பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். சுழற்சி முறையில், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். மாணவ, மாணவியர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும், வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். அரசின் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வகுப்புகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விபரம், அதில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், போடாதவர்களின் விபரங்களை தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu