நாமக்கல் : அரசு பள்ளி மாணவருக்கு தலா 10 முட்டையுடன் உலர் உணவு தானியம் வழங்கும் பணி துவக்கம்

நாமக்கல் : அரசு பள்ளி மாணவருக்கு தலா 10 முட்டையுடன் உலர் உணவு தானியம் வழங்கும் பணி துவக்கம்
X

முட்டையுடன் உலர் உணவு வழங்கும் திட்டம் (மாதிரி படம்)

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு,உலர் உணவு பொருட்கள் வினியோகம் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு,உலர் உணவு பொருட்கள் வினியோகம் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 202, மார்ச் 25 முதல் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையில், மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு, சத்துணவு போன்ற உணவு பொருட்களை வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதையடுத்து, மதிய உணவு திட்டத்தின் கீழ் அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, உலர் அரிசி, பருப்பு ஆகியவற்றை அந்தந்தப் பள்ளிகளிலேயே நேரடியாக வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டது. மேலும், உலர் பொருள்களுடன் முட்டையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கடந்த, செப்.1 முதல் ஒவ்வொரு மாணவருக்கும், தலா 10 முட்டைகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தற்போது உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.

ஜூன் மாதத்தில் 22 வேலைநாட்களை கணக்கில் கொண்டு, ஒவ்வொரு மாணவருக்கும், தலா 3 கிலோ, 300 கிராம் அரிசி, 2 கிலோ, 328 கிராம் பருப்பு, 10 முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. சத்துணவு வட்டார வளர்ச்சி அலுவலர் இளஞ்சியம்மாள் மேற்பார்வையில், சத்துணவு அமைப்பாளர் சாந்தா, சமையலர் ஈஸ்வரி ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர். மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இப்பணி துவங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!