நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் இளம் வயதினர் அதிகளவில் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டத்தில், கொரோனாவின் முதல் அலையில் வயது முதிர்ந்தவர்களே அதிக அளவில் உயிரிழந்தனர். ஆனால் 2-வது அலையானது வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் தாக்கி வருகிறது. நுரையீரல், இருதயம் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு அதிகம் ஏற்படுவதால் குறைந்த வயதுடையோரும் உயிரிழந்து வருகின்றனர்.
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, கடந்த 22ம் தேதி வரை கொரோனாவுக்கு 389 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 38 பேர், 10 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள். 126 பேர், 40 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள். மீதமுள்ள 219 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்த வரையில், அதிகபட்சமாக பள்ளிபாளையத்தில் 83 பேரும், குறைந்தபட்சமாக கொல்லிமலையில் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக இறந்தவர்களின் எண்ணிக்கை: பள்ளிபாளையம்-83, நாமக்கல்-57, ராசிபுரம்-43, திருச்செங்கோடு-38, நாமகிரிப்பேட்டை-28, எருமப்பட்டி-25, மோகனூர்-19, வெண்ணந்தூர்-19, பரமத்தி-15, சேந்தமங்கலம்-15, எலச்சிபாளையம்-11, கபிலர்மலை-10, புதுச்சத்திரம்-10, மல்லசமுத்திரம்-9, கொல்லிமலை-1.
கொரோனாவின் 2-வது அலை அனைத்து வயதினரையும் தாக்கி வருவதால் பொதுமக்கள் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் வேண்டும் என்று மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu