நாமக்கல் மாவட்ட வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-2022 ஆம் ஆண்டிற்கு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பம் செய்பவர்கள், 1.1.2021 அன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72.000க்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் இண்டர்நெட் மூலம் பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றிவருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 வீதம் அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆக. 31ம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும் என்று, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu