நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி சிறப்பு யாக பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி சிறப்பு யாக பூஜை
X

சிறப்பு யாக பூஜையில் பிராமணர்கள்.

நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள மகரிஷி நகர் வல்லப விநாயகர் கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

ஆவணி மாதம் பவுர்ணமி நாளில் வரும் அவிட்ட நட்சத்திரத்தில், ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நாளில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மற்றும் உபநயணம் செய்துகொண்ட பிராமணர்கள் ஆற்றங்கரைகளில் அல்லது குளக்கரைகளில் தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்துக்கொள்வர்.

திருமணம் ஆகாதவர்களுக்க ஒரு பூணூல், திருமணம் ஆனவர்களுக்கு இரண்டு பூணூலையும், திருமணம் ஆகி தந்தையை இழந்தவர்கள் 3 பூணூலையும் அணிந்து கொள்வர். அதன்படி இன்று ஆவணி அவிட்டத்தையொட்டி உபநயணம் எனப்படும் பூணூல் மாற்றி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையர்களை நினைத்து எள்ளும், அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். பின்னர் தங்களின் பூணூலை புதுப்பித்துக் கொண்டு வேதங்களைப் படிக்கத் தொடங்கலாம். சமஸ்கிருதத்தில் இதற்கு உபாகர்ம என்று பெயர். ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணிந்து கொண்டவர்களுக்கு எவ்வித துன்பங்களும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூர், பரமத்திவேலூர், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களை சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றன. திரளான பிராமணர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கள்ளப்பூணூல், பிரம்மச்சாரி பூணூல், கிரஹஸ்தர் பூணூல், சஷ்டியப்த பூர்த்தி பூணூல் ஆகியவற்றை அணிந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.

Tags

Next Story
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி..!