நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு 189 பேர்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பரமத்திவேலூர், கொமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர், என்.கொசவம்பட்டி, கீரம்பூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 66,928 ஆக உயர்ந்துள்ளது. இன்று 748 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 62,960 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 3,439- பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்றால் ஓருவர் உயிரிழந்தார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 529 ஆக அதிகரித்துள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu