நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 295 பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 295 பேருக்கு கொரோனா தொற்று
X
நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 295 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை மொத்தம் 56,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, பரமத்திவேலூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில் இன்று 18ம் தேதி மொத்தம் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இன்று 92 பேர் சிகிச்சையில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56,698, இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் 54,553 பேர். தற்போது மொத்தம் 1,623 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 522 பேர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு