நாமக்கல் நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், லோக் ஆயுக்தா உறுப்பினராக பொறுப்பேற்பு

லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ் மாறுதல் பெற்று, சென்னையில் உள்ள மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு பணியாளர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும், லோக் ஆயுக்தா உறுப்பினராக பொறுப்பேற்ற்றார்.
கடந்த 2023ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக, நாமக்கல் மாவட் நுகர்வோர் கோர்ட் நீதிபதியாக ராமராஜ் பணியாற்றி வந்தத். அவர் சென்னையில் உள்ள லோக் ஆயுக்தா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதியை பணியை அவர் ராஜினாமா செய்தார். பின்னர் சென்னையில் லோக் ஆயுக்தா உறுப்பினராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டில் பிறந்தவர் ராமராஜ். இவர் நீதி நிர்வாகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கமிஷனில் 13 மாதங்கள் உறுப்பினராகவும், கடந்த 3 ஆண்டுகளாக அரியலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2023 ஏப்ரல் முதல் தற்போது வரை 23 மாதங்களில் 500க்கும் மேற்பட்ட நுகர்வோர் சம்மந்தப்பட்ட வழக்குகளில் அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார். கடந்த ஓராண்டில் கோயம்புத்தூரில் இருந்து விரைவான விசாரணைக்காக மாற்றலாகி வந்த 128 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu