/* */

நாமக்கல்: மானியத்தில் மின் மோட்டார் பம்ப்செட் பெற விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப்செட் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்: மானியத்தில் மின் மோட்டார் பம்ப்செட் பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்

வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியத்துடன் கூடிய மின்சா மோட்டார் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப்செட் வழங்கப்படுகிறது. மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப் செட்டுகள் பெறுவதற்கு 3 ஏக்கர் வரை நிலம் சொந்தமாக வைத்திருக்கவேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்மோட்டார் பம்ப்செட் மாற்றுவதற்கும் அல்லது புதிய மின் மோட்டார் பம்ப்செட் வாங்குவதற்கும் (அதிகபட்சம் 10 எச்.பி வரை) மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் 2021-22 ம் ஆண்டு முதல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், சிறு மற்றும் குறு விவசாயிக்கான தாசில்தார் சான்று, மின் இணைப்பு சான்றின் நகல், வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க ஜெராக்ஸ் நகல் ஆகிய ஆவணங்களுடன், விண்ணப்பத்தினை தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களைப் பெற்றிட வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்