நாமக்கல்: எருமப்பட்டியில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா

நாமக்கல்: எருமப்பட்டியில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
X

எருமப்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பென்னேரியில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த காங்கிரஸ் தலைவர் சிவஞானம் பிள்ளை நினைவு கொடிக்கம்பம் திறப்பு விழா நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கராஜ் முன்னிலையில், மாவட்டத் தலைவர் சித்திக் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார்.

டாக்டர் நல்லசேகர் கல்வெட்டை திறந்து வைத்தார். எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து செயலாளர் கருணாநிதி, நாமக்கல் வட்டார தலைவர் ரகு, புதுச்சத்திரம் மேற்கு வட்டார தலைவர் சக்திவேல், பொறியாளர் பிரிவு பொன்முடி, மாவட்ட செயலாளர் கன்னியம்மாள், செந்தில் குமார், காந்தி சுப்பிரமணி, வட்டார துணை தலைவர் கோவிந்தசாமி சங்கர், வட்டார செயலாளர்கள் மகேஸ்வரி, இளைஞர் காங்கிரஸ் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!