அடுத்த ஆண்டு ஜனவரியில் நாமக்கல் ஆவின் பால் பதப்படுத்தும் ஆலை செயல்படத் துவங்கும்: ராஜேஷ்குமார், எம்.பி., தகவல்

அடுத்த ஆண்டு ஜனவரியில் நாமக்கல் ஆவின் பால் பதப்படுத்தும் ஆலை செயல்படத் துவங்கும்:   ராஜேஷ்குமார், எம்.பி., தகவல்
X

நாமக்கல்லில் ஆவின் பால் பதப்படுத்தப்படும் ஆலை கட்டுமானப் பணிகளை ராஜேஷ்குமார், எம்.பி., பார்வையிட்டார். அருகில் கலெக்டர் உமா.

அடுத்த ஆண்டு ஜனவரியில் நாமக்கல் ஆவின் பால் பதப்படுத்தும் ஆலை செயல்படத்துவங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.

நாமக்கல்,

அடுத்த ஆண்டு ஜனவரியில் நாமக்கல் ஆவின் பால் பதப்படுத்தும் ஆலை செயல்படத்துவங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், மத்திய-, மாநில அரசு துறைகளின் நிதி உதவியோடு, ரூ. 90 கோடி மதிப்பில், நவீன ஆவின் பால் பதப்படுத்தும் ஆலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், கலெக்டர் உமா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ராஜேஷ்குமார், எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்திற்காக தனியாக ஆவின் கூட்டுறவு ஒன்றியம் துவக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ரூ. 1.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பாலை பதப்படுத்தவும், விற்பனை செய்யவும், உப பொருட்கள் உற்பத்தி செய்யவும், சேலம் மாவட்ட ஆவினை நம்பி இருந்தோம். பாலை பதப்படுத்த லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3.80 வீதம், சேலம் ஆவினுக்கு செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அதனால், நாமக்கல் மாவட்டத்திற்கான தனியாக பால் பண்ணை, பதப்படுத்தும் ஆலை வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, 2022ம் ஆண்டு நாமக்கல் ஆவீன் மூலம் நவீன பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், 13 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆவின் பால் பதப்படுத்தும் ஆலை கட்டுமானப் பணிகள் ரூ. 90 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 60 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தேசிய பால்வள வாரியத்தின் மூலம் இந்த கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 26ம் ஆண்டு ஜனவரிக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு, பால் பதப்படுத்தும் ஆலை மற்றும் உப பொருட்கள் உற்பத்தி தொடங்கும். இந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, இந்த ஆட்சியிலேயே கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, மக்களின் பயன்பாட்டிற்கு வருகின்ற திட்டமாக, நவீன பால் பதப்படுத்தும் ஆலை உள்ளது. நாள் ஒன்றுக்கு, 2 லட்சம் லிட்டர் பால், கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய பால்வள வாரியத்தின் பெங்களூர் மண்டலத் தலைவர் கி?ஷார், துணைப் பொது மேலாளர் சசிகுமார், மேலாளர் பிருத்வி, நாமக்கல் ஆவின் பொது மேலாளர் சண்முகம், துணைப் பொது மேலாளர் ராஜேஸ்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Next Story
ai tools for education