நாமக்கல் மாவட்டத்தில் 682 பேருக்கு கொரோனா பாதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் 682 பேருக்கு கொரோனா பாதிப்பு!
X
நாமக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,217 ஆக உயர்ந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றும் நாமக்கல் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் பெருந்துறை, கோவை, ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்ப கட்ட அறிகுறி உள்ளவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சுகாதாரத்துறை புள்ளி விவரங்களின்படி, நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 36,217 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 28,584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 7,330 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று 11 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை, 303 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture