பாச்சல் கிராமத்தில் முத்துக்குமார சுவாமி மற்றும் சமயபுரத்து மாரியம்மன் திருவிழா கோலாகலம்

பாச்சல் கிராமத்தில் முத்துக்குமார சுவாமி மற்றும் சமயபுரத்து மாரியம்மன் திருவிழா கோலாகலம்
X

நாமக்கல் மாவட்டம் பாச்சல் கிராமத்தில் நடைபெற்ற முத்துக்குமார சுவாமி மற்றும் சமயபுரத்து மாரியம்மன் திருவிழாவில் திரளன பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பாச்சல் கிராமத்தில், முத்துக்குமார சுவாமி மற்றும் சமயபுரத்து அம்மன் திருக்கோயில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

நாமக்கல்,

பாச்சல் கிராமத்தில், முத்துக்குமார சுவாமி மற்றும் சமயபுரத்து அம்மன் திருக்கோயில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்துள்ள பாச்சல் கிராமத்தில், முத்துக்குமார சுவாமி மற்றும் சமயபுரத்தம்மன் திருக்கோயில்கள் உள்ளன. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து விநாயகர், முத்துக் குமாரசுவாமி, சமயபுரத்து மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் 7ம் தேதி, நவ வீரர்கள் படைக்களம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் பானை அழைத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, முத்துக்குமாரசுவாமி திருக்கோயிலில் பூஜை கூடை அழைத்து, ஏராளமான பெண்கள் பொங்கள் வைத்து வழிபட்டனர். பின்னர் மாவிளக்கு ஊர்வலம் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு அலகு குத்தி நேர்த்திக்குடன் செலுத்தினார்கள்.

தொடர்ந்து, பாச்சல் அருள்மிகு முத்துக்குமார் சுவாமி மற்றும் சமயபுரத்து அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story