கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
X
பைல் படம்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இளம் பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்த பெண்ணுக்கு, நாமக்கல் மகளிர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி தேவராயபுரத்தை சேர்ந்தவர் நடராஜன், இவரது மனைவி கிருஷ்ணவேணி (34). அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (35) கூலித்தொழிலாளி. சிவக்குமாருக்கும், கிருஷ்ணவேணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் கள்ளக்காதலுக்கு, சிவக்குமாரின் மனைவி அம்பிகா (25), இடையூறாக இருந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்த கிருஷ்ணவேணி, கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி, இரவு 8.30 மணிக்கு சிவக்குமாரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்து அம்பிகாவுக்கு, டீயில் மயக்க மருந்து கொடுத்துள்ளார். மயங்கி கீழே விழுந்தவரை, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். புகாரின் பேரில் இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேணியை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் பெண்ணை கொலை செய்த கிருஷ்ணவேணிக்கு, ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story
the future of ai in healthcare