நாமக்கல் டாஸ்மாக் கடையில் பணம் கையாடல்: ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

நாமக்கல் டாஸ்மாக் கடையில் பணம் கையாடல்: ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
X
நாமக்கல் டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.38 ஆயிரம் கையாடல் செய்த 3 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.38 ஆயிரம் கையாடல் செய்த 3 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில், அரசுக்கு சொந்தான 189 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடைகளில், முறைகேடு நடப்பதாக அடிக்கடி புகார்கள் வருகிறது.

இது சம்மந்தமாக அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சில டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையில் முறைகேடு நடப்பதாக மண்டல மேலாளருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் சேலம் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் வேர் ஹவுஸ் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்தக்கடையில் ரூ. 37,790 ரூபாய் விற்பனை இருப்பு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் கையாடால் செய்த கடை பணியாளர்கள் சக்திவேல், தமிழரசன், மற்றொரு சக்திவேல் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!