மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் தடையை மீறி முன்னோருக்கு தர்ப்பணம்

மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் மகளாய அமாவாசை நாளில், தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், ஆற்றுக்கு செல்லும் வழியில் ஒரு காலி இடத்தில் அமர்ந்து பொதுமக்கள் திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி, மோகனூர் காவிரி ஆற்றில், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசை, மகாளய அமாவாசையாக போற்றப்படுகிறது. அன்றைய தினம், இறந்துபோன, முன்னோர்களுக்கு மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்தால், அதை, அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது நம்பிக்கை. மேலும், நாம் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதற்காக, பித்ரு லோகத்தில் இருந்து, பூமிக்கு வருவாக ஐதீகமும் நம்பிக்கையும் உள்ளது. மகாளய அமாவாசை நாளில் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை பித்ருக்களுக்கு வைத்து, பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டு, ஆற்றில் பொருட்களை விட்டு வழிபடுவர்.
இந்தநிலையில், கொரோனா பரவல் தடுப்ப நடவடிக்கையாகக, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கோயில்கள் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மகாளய அமாவாசையான நேற்று காவிரி ஆற்றுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பர். அதன் மூலம், கொரோனா தொற்று பரவும் என்பதால் நேற்று கோவில்கள் மற்றும் ஆறுகளுக்கு பக்தர்களை அனுமதிக்க, மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி, மோகனூர் காவிரி ஆற்றின் படித்துறையில், ஏராளமான பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தகவல் அறிந்த மோகனூர் அங்கு சென்று, பொதுமக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வேறுவழியின்றி, அருகில் உள்ள விநாயகர் கோயில் மற்றும் ஆங்காங்கே, அமர்ந்து பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu