நாமக்கல் தொகுதியில் மக்களைத் தேடி எம்எல்ஏ திட்டம் துவக்கம்

நாமக்கல் தொகுதியில் மக்களைத் தேடி எம்எல்ஏ திட்டம் துவக்கம்
X

புதுச்சத்திரம் ஒன்றியம், வல்லியனைப்பட்டி கிராமத்தில் தரைமட்ட தண்ணீர் தொட்டியை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார். அருகில் ஒன்றிய தலைவர் சாந்தி.

மக்களைத்தேடி எம்எல்ஏ திட்டத்தின்கீழ், திருமலைப்பட்டி பகுதியில் எம்எல்ஏ ராமலிங்கம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மக்களைத்தேடி சட்டமன்ற உறுப்பினர் திட்டத்தின்கீழ், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் திருமலைப்பட்டி பகுதியில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

நாமக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பகுதிகளில் மக்களைத்தேடி திட்டத்தை எம்எல்ஏ ராமலிங்கம் மேற்கொண்டு வருகிறார். இதன் துவக்க விழா, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் திருமலைப்பட்டியில் நடைபெற்றது. எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வல்லியனைப்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து எடையப்பட்டி, புதுவெள்ளாந்தெரு, பெரிய காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளித்து, விரைந்து தீர்வு காணப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார். புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி, ஏபிஆர்ஓ கோகுல், ஒன்றிய திமுக செயலாளர் கவுதம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!