புதுச்சத்திரம் அருகே தீ விபத்தில் வீடு சேதம்: எம்எல்ஏ நிவாரண உதவி

புதுச்சத்திரம் அருகே தீ விபத்தில் வீடு சேதம்:  எம்எல்ஏ  நிவாரண உதவி
X

புதுச்சத்திரம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் வீடு சேதம் அடைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிவாரண உதவிப்பொருட்களை வழங்கினார்.

புதுச்சத்திரம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் வீடு சேதமடைந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ ராமலிங்கம் நிவாரண உதவிகளை வழங்கினார்.

புதுச்சத்திரம் ஒன்றியம், ஏழூர் பஞ்சாயத்து, வேப்பம்பட்டிபுதூர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ். சம்பவத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் அவரது வீடு தீப்பிடித்து எரிந்துவிட்டது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேமடைந்தன.

இது குறித்து தகவல் கிடைத்ததும், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் அங்குநேரில் சென்று பார்வையிட்டு, சுரேஷின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும், அக்குடும்பத்தினருக்கு சேதவையான துணிமணிகள், அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் துரை ராமசாமி, மாவட்ட திமுக விவசாய அணி துணைச் செயலாளர் பாஸ்கர், பஞ்சாயத்து தலைவர் யோகப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!