நாமக்கல்லில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் மதிவேந்தன் பிரச்சாரம்

நாமக்கல்லில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் மதிவேந்தன் பிரச்சாரம்
X
நாமக்கல் முனிசிபாலிட்டி 9 வார்டு திமுக வேட்பாளர் நந்தகுமாரை ஆதரித்து அமைச்சர் மதிவேந்தன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

நாமக்கல் முனிசிபாலிட்டி 9வது வார்டு திமுக வேட்பாளராக, நந்தகுமார் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் திறந்த ஆட்டோவில் சென்று சின்னஅய்யபாளையம், லக்கம்பாளையம் பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் திமுக அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வெங்கடாசலம், பொன்னுசாமி, பழனி, அனிதா, விஜயா,செல்வம், ரமேஷ், தமிழ்வாணன், செந்தில் உள்ளிட்ட திரளான திமுக பிரமுகர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture