சிறுவனின் ஆபரேசனுக்காக, மனுவைப் பெற்றவுடன் மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை : ஆட்சியர் வழங்கல்

சிறுவனின் ஆபரேசனுக்காக, மனுவைப் பெற்றவுடன்  மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை : ஆட்சியர் வழங்கல்

சிறுவனின் இருதய அறுவை சிகிச்சைக்காக, மனுவைப் பெற்ற உடன், முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் அட்டையை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வழங்கினார்.

Medical Insurance Card Issued நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனுவைப் பெற்ற உடன், இருதய சிகிச்சை மேற்கொள்வதற்காக, சிறுவனுக்கு முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அட்டையை ஆட்சியர் உமா வழங்கினார்.

Medical Insurance Card Issued

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 547 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட ஆட்சியர், அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கொல்லிமலை, சித்தூர்நாடு பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரது மகன் ரனிஷ் (2) என்ற குழந்தைக்கு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை வழங்ககோரி பெறப்பட்ட மனுவின் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களுக்கு கூட்டத்திலேயே மருத்துவ இன்சூரன்ஸ் அட்டையை ஆட்சியர் வழங்கினார். கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய 2 பேருக்கு மறுவாழ்வு நிதி உதவித்தொகையாக தலா ரூ.50,000- வீதம் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.750- மதிப்பிலான கைதாங்கியையும் மாவட்டஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் டிஆர்ஒ சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story