வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : கலெக்டர் ஆலோசனை

பைல் படம்
நாமக்கல்,
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறதது. கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக வெப்பம் பெரும் சவாலாக உள்ளது. வெப்ப அயற்சியினால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு நடுக்கம் ஏற்பட்டு கீழே விழும் அபாயம் உள்ளது. வெப்பத்தில் இருந்து காப்பாற்ற, கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவேண்டும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் தீவனம் கொடுக்கவேண்டும். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்து கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வெயில் காலங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நண்பகல் நேரங்களில் மாடுகளுக்கு வெப்பத்தினால் அயர்ச்சி ஏற்படாமல் இருக்க, அதன் மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். நீர் தெளிப்பான் கொண்டு கோழிகளின் மீது நீர் தெளிக்க வேண்டும், மேலும் கோழி கொட்டகைகளின் சன்னல்களில் ஈரத்துணி கொண்டு முடுவதால் கோழிகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சியை குறைக்கலாம். வெயில் காலங்களில் அதிகப்படியான கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும். சரியான கோடைகால பராமரிப்பு முறைகளை கையாளாவிட்டால் கறவை மாடுகள் வெப்ப அயர்ச்சியால் பாதிக்கப்பட்டு இறப்பை சந்திக்கும். கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறையாவது சுத்தமான, குடிப்பதற்கு உகந்த குடிநீர் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர்த் தொட்டியை அமைக்க வேண்டும். மாடுகளை தண்ணீர் குடிக்க செய்யும் போது கலப்பு தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு தூவும் போது மாடுகளின் தண்ணீர் குடிக்கும் அளவு அதிகரிக்கும். கலப்பு தீவனம் உட்கொண்ட பிறகு தண்ணீர் வைத்தால் அதிகமாகக் குடிக்கும். இதன் மூலம் தண்ணீர் உட்கொள்வதை அதிகரிக்கலாம். கறவை மாடுகளின் உடல் வெப்பத்தினைத் தணிப்பதற்கு நீர்த்தெளிப்பான் அமைப்பது. குளிர்ந்த நீரினைக் கால்நடைகளின் மேல் தெளிப்பது, மின்விசிறி அமைப்பது ஆகியவை முலம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் அயர்ச்சியினைத் தவிர்க்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu