மோகனூர் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை: இளைஞர் கைது

பைல் படம்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள, ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் அருண்குமார் (28). இவருக்கும், எருமப்பட்டி அருகே வரதராஜபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அருண்குமார் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி நன்செய் இடையாறு பகுதியில் உள்ள ஒரு கோயில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து சிறுமியுடன் அருண்குமார் மோகனூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வந்தாராம். அப்போது சிறுமியை அருண்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். சிறுமி திருமணம், கர்ப்பம் அடைந்தது குறித்து அறிந்த சைல்டு லைன் உறுப்பினர்கள் நந்தினி, சுப்ரமணியம், விஏஓ கல்பனா ஆகியோர் இதுகுறித்து, எருமப்பட்டி வட்டார குழந்தை திருமண தடுப்பு விரிவாக்க அலுவலர் செல்வராணிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்த அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu