நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வரும் 26ம் தேதி மண்டல பூஜை

நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வரும் 26ம் தேதி மண்டல பூஜை
X

கோப்பு படம் 

நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வருகிற 26ம் தேதி மண்டல பூஜை, நெய் அபிசேகம் நடைபெறுகிறது.

நாமக்கல் நகரம், மோகனூர் ரோட்டில், ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வருகிற 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு, சுவாமிக்கு நெய் அபிசேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அஷ்டாபிசேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதணை நடைபெறும்.

அன்று மதியம் 1 மணிக்கு, கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 7 மணி முதல், 8 மணி வரை ஐயப்ப பக்தர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணி முதல், 9 மணி வரை மேஜிக் நிபுணர் பாபுவின் மாபெரும் மேஜிக் ஷோ நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் ஸ்ரீ ஐயப்பசாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!