கொல்லிலையில் கூல் டிரிங்ஸ் குடித்தவர் உயிரிழப்பு, 10 வயது சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

கொல்லிலையில் கூல் டிரிங்ஸ் குடித்தவர் உயிரிழப்பு,    10 வயது சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதி
X

பைல் படம் 

கொல்லிமலையில் கூல் டிரிங்ஸ் குடித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 10 வயது சிறுவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல்

கொல்லிமலையில் கூல் டிரிங்ஸ் குடித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 10 வயது சிறுவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு உட்பட்ட சித்தூர்நாடு ஊராட்சி படக்கிராய் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (42). இவரது 10 வயது மகன் அங்குள்ள அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (23) என்பவர் வந்துள்ளார். தொடர்ந்து பழனிசாமியும், 10 வயது சிறுவனும் ஒரு பாட்டிலில் இருந்த கூல் டிரிங்சை ஒன்றை குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர். இதையடுத்து இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைக்கப்பட்டனர். வரும் வழியில் பழனிசாமி உயிரிழந்துவிட்டார். சிறுவனுக்கு ஆஸ்பத்திரியில் அனுமதி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கொல்லிமலை வாழவந்திநாடு போலீசச் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
future ai robot technology