நாமக்கல்: தொடர் மழையால் நிரம்பி வழியும் பழையபாளையம் ஏரி
நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், பழையபாளையம் ஏரி நிரம்பி உபரி நீர் வழிந்தோடுகிறது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மற்றும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காளப்பநாய்க்கன்பட்டி, சேந்தமங்கலம், அலங்காநத்தம், எருமப்பட்டி, சிவந்திப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நீர் நிரம்பி வழிந்தோடுகின்றன. இந்த நிலையில் முத்துகாப்பட்டி அருகில் உள்ள பழையபாளையம் ஏரி நிறைந்து, அதன் கடைகால் பகுதியில் உபரி நீர் வழிந்தோடுகிறது.
உபரிநீர் கால்வாய் வழியாக, மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரியைச் சென்றடைகிறது. இந்த ஏரியும் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. தூசூர் ஏரி நிரம்பினால் வெள்ளநீர், அரூர் ஆண்டாபுரம் ஏரிக்கு சென்று, பின்னர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகில் காவிரியில் கலக்கும். நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல இடங்களில் பொதுமக்கள் நீர் நிரம்பியுள்ள ஏரிகளை பார்வையிட்டு செல்கின்றனர். வழிந்தோடும் நீரில் சிறுவர்கள் குதித்து விளையாடி மகிழ்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu