கோழித்தீவனம்: பிரதமர் மோடியிடம் சின்ராஜ் எம்.பி. கோரிக்கை மனு

கோழித்தீவனம்: பிரதமர் மோடியிடம் சின்ராஜ் எம்.பி. கோரிக்கை மனு
X

வெளிநாடுகளில் இருந்து கோழித்தீவனத்திற்காக மக்காச்சோளம் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டி, நாமக்கல் எம்.பி சின்ராஜ் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

கோழித்தீவனம் இறக்குமதி செய்ய அனுமதி கோரி பிரதமர் மோடியிடம் சின்ராஜ் எம்.பி. கோரிக்கை மனு அளித்தார்.

வெளிநாடுகளில் இருந்து கோழித்தீவனத்திற்காக மக்காச்சோளம் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டி, நாமக்கல் எம்.பி சின்ராஜ் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

தமிழகத்தில் கோழித்தீவன உற்பத்திக்கு தேவையான மக்காச்சோளம், தவிடு, கடலைப் புண்ணாக்கு, சோயாப்புண்ணாக்கு போன்ற மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தீவன உற்பத்தி செலவு அதிகரித்து, முட்டை உற்பத்தி செலவும் அதிகரித்து வருகிறது. முட்டைக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல், குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், கோழிப்பண்ணைத் தொழிலில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பல பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையொட்டி வெளிநாடுகளில் இருந்து கோழித்தீவனத்திற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய பண்ணையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், கோழிப்பண்ணையாளர்களின் நலன் கருதி வெளிநாடுகளிலில் இருந்து மரபணு மாற்றப்பட்ட, உடைத்த மக்காசோளம் இறக்குமதி செய்ய அனுமதிஅளிக்க வேண்டி, பாரத பிரதமர் மோடியை, நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜ் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட பிரதமர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ்கோயலையும் நேரில் சந்தித்து, இது குறித்த மனுவை வழங்கினார். கோழிப்பண்ணையாளர்களுக்காக பிரதமரை சந்தித்து பேசிய எம்.பி சின்ராஜிற்கு, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story