கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரிக்கு வருகை புரிந்த. ஜப்பான் நாட்டின் கல்வியாளர்களை, கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி வரவேற்றார்.
கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவ மாணவிகளின் வேலை வாய்ப்புக்காக, ஜப்பானை சேர்ந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டியில் உள்ளது கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர், அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதற்கும் மற்றும் உயர் கல்வி கற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில், ஜப்பான் நாட்டைச்சார்ந்த டெக்னோ ஸ்மைல் இன்கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்லூரியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி, ஜப்பான் நிறுவன தலைவர் கென்யா அபே மற்றும் அதன் ஆலோசகர் யாசுபுமிமேனகா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன், கேட்வே டு ஜப்பான் கம்பெனியின் தலைவர் சவரணன், ஜப்பான் டோக்கியோ நெக்ஸ்ட்ஜென் கார்ப்பரேசன் இயக்குநர் ராஜேஸ்குமார் சங்கரலிங்கம், கல்லூரி டீன் அலுவலர்கள் யோகப்பிரியா, விஜயகுமார், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திவ் மூலம், 2022-ம் ஆண்டு முதல் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாண மணவியர் ஜப்பானிய மொழியை கற்கவும், ஜப்பானில் உள்ள உயர்மட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu