முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கிய கொல்லிமலை பள்ளி மாணவர்கள்!

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கிய கொல்லிமலை பள்ளி மாணவர்கள்!
X

நாமக்கல் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கொல்லிமலையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ரூ.20 ஆயிரத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்கள். அருகில் அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.சின்ராஜ், எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் ஆகியோர்.

கொல்லிமலையை சேர்ந்த பள்ளி மாணவர்கள், தங்களது சிறுசேமிப்புத்தொகை ரூ.20 ஆயிரத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

அப்போது, கொல்லிமலை, வாழவந்திக் கோம்பை பஞ்சாயத்து புளியங்காடு கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது மகன்கள் கவின் மற்றும் தரணி ஆகியோர், தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரிடம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்த்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நாமக்கல் கலெக்டர் மெகராஜ், எம்பி சின்ராஜ், எம்எல்ஏக்கள் சேந்தமங்கலம் பொன்னுசாமி, நாமக்கல் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, நன்கொடையாளர் ரஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business