பார்லி. தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ. 30 கோடி வழங்க கொமதேக கோரிக்கை

பார்லி. தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு    ரூ. 30 கோடி வழங்க கொமதேக கோரிக்கை
X

நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக செயற்குழு கூட்டத்தில், மாதேஸ்வரன், எம்.பி., பேசினார்.

மத்திய அரசு பார்லி. தொகுதி மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ. 30 கோடி வழங்க வேண்டும் என கொமதேக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், எம்.பி., நிகழ்ச்சிக்கு தøமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வருகிற ஏப்.,17ம் தேதி தீரன் சின்னமலை பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நாமக்கில்லில் இருந்து கட்சி திரளான கொமதேவினர் கலந்து கொள்ள வேண்டும். பொதுச்செயலாளர் ஈஸ்ரவன் வழிகாட்டுதலின் பேரில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும், திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும். மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்களது பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் மாதேஸ்வரன் எம்.பியின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். மத்திய அரசு பார்லிமெண்ட் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியில் இருந்து 30 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பிட்ட சில நபர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், எம்.பி மாதேஸ்வரனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் துரை, மணி, ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் மோகன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Next Story